திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா லிபிய நாட்டில் கடாபியின் ஏவுதலால் ராணுவம் நடத்திய காட்டுமிராண்டி தனமான தாக்குதலில் உயிர் இழந்து உள்ளார்.முருகையா உள்ளிட்ட 26 இந்தியத் தொழிலாளர்களை, தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், லிபிய நாட்டில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிக்காக அமர்த்தி உள்ளது.அவர்கள் ஏற்கனவே அங்கு அபாயகரமான் சூழ்நிலையில் பனி செய்து வருகின்றனர். தற்போது கடாபியின் கொடுகோல் ஆட்சியை எதிர்த்து மக்கள் போராடி வருகின்றனர், கடாபியும் கொடூரமான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளான் . பிப்ரவரி 22 ஆம் நாள் லிபிய அரசுப் படைகள் தொழிலாளர்கள் தங்கிய இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். தொழிலாளர்கள் வெளியேற முயன்றபோது, திடீரென ராணுவம் துப்பாக்கியால் சுட்டதில் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்து உள்ளார்.
இந்தத் தகவலை, லிபியாவில் இருந்து தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர்.ஆனால் லிபிய அரசு இந்த உண்மையை மறைத்து முருகையா விபத்தில் இறந்தார் என்று கூறி உள்ளது. இந்திய வெளியுறவுத்துறையும் அதை ஏற்றுக்கொண்டு, முருகையா விபத்தில் இறந்ததாகவே கடாபியின் வாசகத்திற்கு ஒத்து ஊதுகிறது.முருகையாவின் உடல் இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற தமிழர்களும் பத்திரமாக மீட்க்கபடவேண்டும்.
No comments:
Post a Comment