தமிழ்நாடு பொது தொழிலாளர் சங்கம்
நம்முடைய உரிமை எதுவும் கேட்காமல் கிடைப்பதில்லை
Wednesday, November 23, 2016
Sunday, August 28, 2011
ஏ.ஐ.டி.யு.சி. - யின் தொழிலாளர் துரோகம்
கடந்த மாதத்தில் குர்கவுன் மாருதி தொழிற்சாலையில் புதிய தொழிற்சங்கம் அமைத்ததற்காக சில தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கியது மாருதி கார் நிறுவனம். இதனால் அங்கு பணி நீக்கப்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு சேர்த்து கொள்ள கோரியும் ,புதிய தொழிற்சங்கத்திற்கு அங்கீகாரம் கோரியும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொழிலாளர்கள் வெற்றிகரமாக, ஒற்றுமையோடு நடத்தினார்கள். இந்த வேலை நிறுத்தம் குர்கவுன் பகுதி முழுவதும் பரவி மற்ற தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். அங்குள்ள பொதுமக்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.
Thursday, May 19, 2011
கூலி அடிமைத் தனத்தை முடிவுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்
மேதினத் தியாகிகளின் கனவை நனவாக்குவோம்
ஒரு நாளைக்கு 16 மணி நேரம் 18 மணி நேரம் என கசக்கிப் பிழியப்பட்ட தொழிலாளிவர்க்கம் 8 மணி நேர வேலை நாளுக்காக போராடி அதனை வென்றெடுத்த தினமே மேதினம். 8 மணி நேர வேலை என்பது ஏதோ போராடிய தொழிலாளரின் மனதில் அப்போது தன்னிச்சையாக உருவானதல்ல. மிருகங்களிலிருந்து வேறுபட்டு மனிதன் ஒரு மனிதனாக வாழ வேண்டுமென்றால் அவனுக்கு 8 மணிநேர வேலை, 8 மணிநேர ஓய்வு, மீதமுள்ள 8 மணி நேரம் சமூக ரீதியான விசயங்களில் ஈடுபாடு என்ற வரையறை வேண்டும் என்ற அடிப்படையிலேயே அக்கோரிக்கை வைக்கப்பட்டது.
அக்கோரிக்கையை முன்வைத்த போராட்டம் முதன்முதலில் இன்று குபேரபுரி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல தொழில் நகரங்களில் 19 வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியது. அக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட உடன் அதில் பொதிந்துள்ள நியாயத்தை உணர்ந்து முதலாளி வர்க்கம் 8 மணிநேர வேலை நாளை அறிமுகம் செய்து விடவில்லை. மாறாக 1886 மே முதல் நாளன்று 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையை வைத்துப் போராடிய தொழிலாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்க மே 4ம் நாள் சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் திரண்டவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்தது. அதற்குத் தலைமை தாங்கிய பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், பிர், லிங்க் மற்றும் எங்கல் என்ற 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அந்த ஐவரில் ஒருவரான லிங்க் முன்கூட்டியே தற்கொலை செய்து கொண்டதால் நான்கு பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் அதில் ஈடுபட்ட வேளையில் கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் அதிகார மையங்களை எதிர்க்கும் அனார்க்கிஸ்டுகளாகவே இருந்தனர்.
அக்கோரிக்கையை முன்வைத்த போராட்டம் முதன்முதலில் இன்று குபேரபுரி என்று வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் பல தொழில் நகரங்களில் 19 வது நூற்றாண்டின் இடைக்காலத்தில் தோன்றியது. அக்கோரிக்கை முன்வைக்கப்பட்ட உடன் அதில் பொதிந்துள்ள நியாயத்தை உணர்ந்து முதலாளி வர்க்கம் 8 மணிநேர வேலை நாளை அறிமுகம் செய்து விடவில்லை. மாறாக 1886 மே முதல் நாளன்று 8 மணி நேர வேலை நாள் கோரிக்கையை வைத்துப் போராடிய தொழிலாளர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டிக்க மே 4ம் நாள் சிகாகோவின் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் திரண்டவர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்தது. அதற்குத் தலைமை தாங்கிய பார்சன்ஸ், ஆகஸ்ட் ஸ்பைஸ், பிர், லிங்க் மற்றும் எங்கல் என்ற 5 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அந்த ஐவரில் ஒருவரான லிங்க் முன்கூட்டியே தற்கொலை செய்து கொண்டதால் நான்கு பேருக்கு அத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு அவர்கள் அதில் ஈடுபட்ட வேளையில் கம்யூனிஸம் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் அதிகார மையங்களை எதிர்க்கும் அனார்க்கிஸ்டுகளாகவே இருந்தனர்.
Friday, April 22, 2011
108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள்
தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிற பிரபலமான திட்டம் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவித் திட்டம். திடீர் விபத்து, தீக்காயங்கள், பாம்புக்கடி, வெட்டு குத்து, மாரடைப்பு, தற்கொலை முயற்சி, பிரசவங்கள் இவற்றிற்கெல்லாம் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுகின்ற அபூர்வ திட்டம் "108" திட்டம்.
வசதி படைத்தாரே பயன்படுத்தி வந்த இந்த வசதியை பாமரர்களுக்கும் கிடைக்கச்செய்து ஏழை எளிய மக்களின் மனதிலும் நம்பிக்கை ஒளிக்கீற்றை ஏற்படுத்தி இருக்கிற திட்டம் 108 ஆம்புலன்ஸ் திட்டம்.
"நவீன மருத்துவம் பெறுவதற்கு நமக்கும் உரிமை உண்டு" என்கிற மக்களின் நம்பிக்கையை பெற வாய்ப்புள்ள திட்டமாக இருப்பதால் இந்தத் திட்டத்தை எந்த அரசாலும் இனிமேல் கைவிடவே முடியாது.
ஏற்கனவே நல்ல ஊதியத்தில் பணி செய்து கொண்டிருந்த இளைஞர்கள் ஒட்டுநர்களாகவும் (997) பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் கல்லூரிக் கல்வி பயின்ற இளைஞர்களும், இளம் பெண்களும் முதலுதவிப் பணியாளர்களாகவும்(1008), கணிணிக் கல்வி பயின்றோர் கால் சென்டர் ஊழியர்களாகவும் இந்த 108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் வேலைக்குச் சேர விரும்பியதற்கு மேற்கூறிய காரணங்களே உந்து சக்தியாக இருந்திருக்கிறது.
Friday, March 18, 2011
"இயன்முறை முறை மருத்துவத்தை மக்கள் சொத்தாக்கிடுவோம்"
- கருப்பன்.சித்தார்த்தன்
நாடெங்கும் பயிர் பச்சைகளை அரித்து தின்னும் வெட்டுக்கிளிகள் . இந்த வெட்டுக்கிளிகளை வேட்டயாடித்தின்று இல்லாமல் செய்யும் மஞ்சக்காட்டு மைனாக்களோ கூண்டுக்குள். வெட்டுக்கிளிகள் பன்மடங்காய் பல்கி பெருகி பயிர்பச்சைகள் அறவே அழித்து நாசப்படுத்த வேண்டும். கூண்டுக்குள் அடைக்கபட்டிருக்கிற மைனாக்களையும் சூப் வைத்து குடித்து விட வேண்டும். இதுதான் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனப் பெருங் கொள்ளையர்களின் நலனுக்கு உகந்தது. இவர்களுக்கு உகந்த எது ஒன்றும் இந்திய தமிழ்நாட்டு ஆட்சியார்களுக்கும் உகந்ததே என்பது நமக்கு பழக்கப்பட்ட விஷயம் தானே ?
இன்று தமிழகத்தில் முப்பது,நாற்பது சதவிகித மக்களுக்கு நரம்பியல் கோளாறு.இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறியல்,குழந்தைகள் நலத்தில் சிக்கல், மூட்டு மாற்று அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு சிகிட்சை,தசை அமுகல் பிரச்சனை என்று பல நூறு உடற்கோளாறுகள்.
வெட்டுக்கிளிகளை வேட்டையாட எப்படி வலை வீச வேண்டாமோ , இந்த உடற்கோளாறுகளை களைய ஊசி மருந்து வேண்டாம். மாத்திரை மருந்து வேண்டாம், குறிப்பிட்ட நரம்புகள் , தமனிகள், தசைகள், சதைகள், மூட்டுக்கள் இவைகளை அதனுடைய போக்கில் இயக்கிட கண்டுபிடிக்க பட்டிருக்கிற மெக்கானிச அடிப்படையில் தடவி, வருடி , உருவி, ஆட்டி அசைத்து, மடக்கி, நீட்டி, அவைகளை அதன் போக்கில் இயங்க செய்தாலே போதும். மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற இந்த உடற்கோளாறுகள் இல்லாமல் போய்விடும். இதற்கான முறையான பாடத்திட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கிற நாலரையாண்டு பட்டப்படிப்பே பிசியோதெரப்பி படிப்பு.
Friday, March 11, 2011
ஒரிஸ்ஸாவில் இரும்பு ஆலை துணை பொது மேலாளர் எரிப்பும் -தொழிலாளர்களின் கையறுநிலையும்
இந்திய முதலாளித்துவ அரசில் தொழிலாளர் சட்டங்கள் என்று இருப்பவையும்
அவை தொழிலாளர்களுக்கு வழங்கும் உரிமைகளும் மிகவும் சொற்பம் என்றே சொல்லலாம். ஆல் போல வளரும் வீட்டு வடாகையும், விண்ணை தாண்டி உயர்ந்து கொண்டே போகும் விலைவாசி உயர்வும் தொழிலாளர்களை சொல்லென்ன துயரத்திற்கு ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இந்திய தொழில் நிறுவனங்கள் ,தொழிலாளர் சட்டங்களை கிஞ்சித்தும் மதிப்பதில்லை இந்த போக்கை ஆளும் முதலாளித்துவ அரசும் , அந்த அரசின் நலனை பேணிக்காக்கும் நீதிமன்றங்களும் இவ்வாறு காலங்காலமாக தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை, இந்த சுரண்டும் போக்கை கண்டும் , காணாதது போல தனது கண்களை இருக்க மூடிக்கொண்டுள்ளன.
Thursday, February 24, 2011
சுமங்கலி திட்டம் என்னும் கொத்தடிமை கொடுமை
ஈரோடு, மதுரை ,விருதுநகர், தாராபுரம், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை முதலாளிகள் கொள்ளை லாபம் குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் நமது இளம் தலைமுறை பெண்கள் தான். 12 முதல் திருமணம் ஆகும் வரை இருக்கும் பெண்களை இந்த திட்டத்திற்கு தரகர்கள் மூலம் கிராமப்புரங்களில் இருந்து தெரிவு செய்து அவர்களை கொத்தடிமைகளாக தொழிற்சாலைகளிலே தங்க வைத்து சுரண்டும் கொடுமை இங்கெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. மிகக்குறைந்த தொகைக்கு 4 வருடகாலம் வரையிலும் ஒப்பந்தம் போடும் முதலாளிகள், அந்த ஒப்பந்த காலத்திற்கு முன்பே அவர்களை எதாவது ஒரு காரணம் சொல்லி வெளியேற்றும் சதியை திட்டமிட்டு அரங்கேற்றுகின்றன. அதை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் அம்பலப்படுத்தி அரசை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய பொறுப்புணர்வுள்ள தொழிற் சங்கங்கள் முதலாளிகளிடம் கமிசன் வாங்கிகொண்டு தூங்கி கொண்டுள்ளது.
தொழிலாளர் கட்சி என்று சொல்லி கொண்டுள்ள CPI , CPI (M ) போன்றவை ஜெயலலிதாவுடன் தேர்தல் பேரம் பேசிக்கொண்டுள்ளன. படிக்க வேண்டிய இளம் பிஞ்சுகள் இவ்வாறு சொல்லென துன்பங்களை தாங்கி கொண்டு வேலை செய்வது நமது அறிவி ஜீவிகளின் காதுகளுக்கு எட்டவே எட்டாது . சுமங்கலி திட்டத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்துவதும் , அதில் மாட்டிக்கொண்டுள்ள தொழிலாளிகளை மீட்டெடுப்பதும் ,உரிய இழப்பீடுகளை அவர்களுக்கு வாங்கி கொடுப்பதும் நமது கடமையாகும்.
Subscribe to:
Posts (Atom)