ஈரோடு, மதுரை ,விருதுநகர், தாராபுரம், திருப்பூர்,கரூர் போன்ற பகுதியில் உள்ள தொழிற்சாலை முதலாளிகள் கொள்ளை லாபம் குவிப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது சுமங்கலி திட்டத்தின் கீழ் வேலை செய்யும் நமது இளம் தலைமுறை பெண்கள் தான். 12 முதல் திருமணம் ஆகும் வரை இருக்கும் பெண்களை இந்த திட்டத்திற்கு தரகர்கள் மூலம் கிராமப்புரங்களில் இருந்து தெரிவு செய்து அவர்களை கொத்தடிமைகளாக தொழிற்சாலைகளிலே தங்க வைத்து சுரண்டும் கொடுமை இங்கெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. மிகக்குறைந்த தொகைக்கு 4 வருடகாலம் வரையிலும் ஒப்பந்தம் போடும் முதலாளிகள், அந்த ஒப்பந்த காலத்திற்கு முன்பே அவர்களை எதாவது ஒரு காரணம் சொல்லி வெளியேற்றும் சதியை திட்டமிட்டு அரங்கேற்றுகின்றன. அதை வெளிக்கொண்டுவந்து மக்கள் முன் அம்பலப்படுத்தி அரசை நெருக்கடிக்குள்ளாக்க வேண்டிய பொறுப்புணர்வுள்ள தொழிற் சங்கங்கள் முதலாளிகளிடம் கமிசன் வாங்கிகொண்டு தூங்கி கொண்டுள்ளது.
தொழிலாளர் கட்சி என்று சொல்லி கொண்டுள்ள CPI , CPI (M ) போன்றவை ஜெயலலிதாவுடன் தேர்தல் பேரம் பேசிக்கொண்டுள்ளன. படிக்க வேண்டிய இளம் பிஞ்சுகள் இவ்வாறு சொல்லென துன்பங்களை தாங்கி கொண்டு வேலை செய்வது நமது அறிவி ஜீவிகளின் காதுகளுக்கு எட்டவே எட்டாது . சுமங்கலி திட்டத்தின் கொடுமைகளை அம்பலப்படுத்துவதும் , அதில் மாட்டிக்கொண்டுள்ள தொழிலாளிகளை மீட்டெடுப்பதும் ,உரிய இழப்பீடுகளை அவர்களுக்கு வாங்கி கொடுப்பதும் நமது கடமையாகும்.
No comments:
Post a Comment