- கருப்பன்.சித்தார்த்தன்
நாடெங்கும் பயிர் பச்சைகளை அரித்து தின்னும் வெட்டுக்கிளிகள் . இந்த வெட்டுக்கிளிகளை வேட்டயாடித்தின்று இல்லாமல் செய்யும் மஞ்சக்காட்டு மைனாக்களோ கூண்டுக்குள். வெட்டுக்கிளிகள் பன்மடங்காய் பல்கி பெருகி பயிர்பச்சைகள் அறவே அழித்து நாசப்படுத்த வேண்டும். கூண்டுக்குள் அடைக்கபட்டிருக்கிற மைனாக்களையும் சூப் வைத்து குடித்து விட வேண்டும். இதுதான் பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனப் பெருங் கொள்ளையர்களின் நலனுக்கு உகந்தது. இவர்களுக்கு உகந்த எது ஒன்றும் இந்திய தமிழ்நாட்டு ஆட்சியார்களுக்கும் உகந்ததே என்பது நமக்கு பழக்கப்பட்ட விஷயம் தானே ?
இன்று தமிழகத்தில் முப்பது,நாற்பது சதவிகித மக்களுக்கு நரம்பியல் கோளாறு.இதயவியல், எலும்பு முறிவு, மகப்பேறியல்,குழந்தைகள் நலத்தில் சிக்கல், மூட்டு மாற்று அறுவை சிகிட்சை, எலும்பு முறிவு சிகிட்சை,தசை அமுகல் பிரச்சனை என்று பல நூறு உடற்கோளாறுகள்.
வெட்டுக்கிளிகளை வேட்டையாட எப்படி வலை வீச வேண்டாமோ , இந்த உடற்கோளாறுகளை களைய ஊசி மருந்து வேண்டாம். மாத்திரை மருந்து வேண்டாம், குறிப்பிட்ட நரம்புகள் , தமனிகள், தசைகள், சதைகள், மூட்டுக்கள் இவைகளை அதனுடைய போக்கில் இயக்கிட கண்டுபிடிக்க பட்டிருக்கிற மெக்கானிச அடிப்படையில் தடவி, வருடி , உருவி, ஆட்டி அசைத்து, மடக்கி, நீட்டி, அவைகளை அதன் போக்கில் இயங்க செய்தாலே போதும். மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிற இந்த உடற்கோளாறுகள் இல்லாமல் போய்விடும். இதற்கான முறையான பாடத்திட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கிற நாலரையாண்டு பட்டப்படிப்பே பிசியோதெரப்பி படிப்பு.